/* */

காட்பாடியில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம்

காட்பாடி யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 8,10-இல் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

காட்பாடியில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம்
X

பைல் படம்

காட்பாடி யாா்டில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், விரைவு ரயில் சேவையில் ஜூலை 8, 10 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

நேரம் மாற்றி இயக்கப்படும் ரயில்கள்:

பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படவேண்டிய சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் விரைவு சிறப்பு ரயில்(02679) 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு சிறப்பு ரயில் (02695) 75 நிமிடம் தாமதமாக மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் (02607) 75 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு புறப்படும்.

இதுதவிர, அகா்தலா-பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு சிறப்பு ரயில்(02984), யஸ்வந்த்பூா்-ஹவுரா துரந்தோ விரைவு சிறப்பு ரயில் (02246) உள்பட 3 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழியில் திருப்பிவிடப்படும் ரயில்கள்:

விழுப்புரம் சந்திப்பில் இருந்து மேற்குவங்கம் மாநிலம் புருலியாவுக்கு ஜூலை 10-ஆம் தேதி மதியம் 12.05 மணிக்கு புறப்படும் விரைவு சிறப்பு ரயில் (06170) விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாக திருப்பிவிடப்படுகிறது.

புருலியா-விழுப்புரத்துக்கு ஜூலை 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் விரைவு சிறப்பு ரயில் (06169) மேல்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்படுகிறது

பகுதி ரத்து:

ஜூலை 7, 9 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மங்களூா்-சென்னை சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் (06628) ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

ஜூலை 8, 10 ஆகிய தேதிகளில் காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-மங்களூரு விரைவு சிறப்பு ரயில் (06627) சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

Updated On: 7 July 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...