/* */

திருப்பூரில் ஏற்றுமதிநிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி டாஸ்மாக் திறப்பு ,போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கவும், போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் ஏற்றுமதிநிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி  டாஸ்மாக் திறப்பு ,போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு
X

சென்னை அரசு தலைமைச் செயலகம்.


திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறக்கவும், போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வகை 1 ல் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு இடுபொருட்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம். தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதியின்றி ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைதிறப்புக்கு அனுமதியளித்தும், போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Updated On: 25 Jun 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...