/* */

மூன்று நாள் பின்னலாடை தொழில்துறை கண்காட்சி, திருப்பூரில் துவக்கம்

Exhibition Today -திருப்பூரில், பின்னலாடை தொழில்துறை கண்காட்சி நேற்று துவங்கியது. நாளை வரை மூன்று நாட்களுக்கு நடக்கும் இக்கண்காட்சியில், 139 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளது.

HIGHLIGHTS

மூன்று நாள் பின்னலாடை தொழில்துறை கண்காட்சி, திருப்பூரில் துவக்கம்
X

திருப்பூரில் பின்னலாடை தொழில்துறை கண்காட்சி நடந்து வருகிறது.

Exhibition Today -'யார்னெக்ஸ்' மற்றும் 'டெக்ஸ் இந்தியா' சார்பில் பின்னலாடை தொழில்துறை கண்காட்சி திருப்பூர், பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று துவங்கியது. யார்னெக்ஸ் கண்காட்சியின் 23-வது பதிப்பு மற்றும் டெக்ஸ் இந்தியாவின் 13-வது பதிப்பு கண்காட்சியான இதில் இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் 139 ஸ்டால்களை அமைத்துள்ளன.

கண்காட்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். 'நிட்மா' செயலாளர் ராஜாமணி, 'டிப்' சங்க தலைவர் அகில் மணி, யார்னெக்ஸ் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பின்னலாடைகளை தயாரிக்க உதவும் நூல்களில் இயற்கை பருத்தி ரகம் மற்றும் பருத்தி, கம்பளி, பட்டு, லினன் கொண்ட பிளெண்டடு நூலிழைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. எலாஸ்டிக், பேன்சி மற்றும் சிறப்பு ஆடை துணி ரகங்களில் நிட்டட், எம்ப்ராய்டரி, கிரே, இம்போர்ட்டட், டெனிம், பாட்டம் வெயிட், பிரிண்ட், பிராசஸ்டு, சில்க், வெல்வெட், வுலன், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட துணி ரகங்கள், டிரிம்ஸ், பட்டன்கள், ஹேங்கர்கள், ஜிப்பர்கள், இண்டர்லைனிங், லேபிள்கள், லேஸ்கள், ஸ்டோன்ஸ், ஸ்டட்ஸ், டேப்ஸ், தையல், எம்ப்பிராய்டரி போன்ற நவீன தயாரிப்புகள் இந்த ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன.

ஆமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, பில்வாரா, சண்டிகர், சென்னை, கொச்சி, கோவை, டெல்லி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, பொள்ளாச்சி, சேலம், திருப்பூர், பரிதாபாத், குர்கோவான், ஜலந்தர், கொல்கத்தா, லூதியானா, மீரட், மும்பை, நொய்டா போன்ற நகரங்களில் இருந்தும், ஆஸ்திரியா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிறுவனத்தினர் ஸ்டால்களை அமைத்துள்ளனர். விசைத்தறி, பின்னலாடை நிறுவனங்கள், சர்வதேச கொள்முதல் நிறுவனங்கள், அவர்களின் முகவர்கள், ஆடைகள் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அப்பேரல் பிராண்டுகள், இறக்குமதியாளர்கள், பேஷன் டிசைனர்கள், பேஷன் லேபிள்கள், வினியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள்.

இந்த கண்காட்சி நாளை (சனிக்கிழமை) நிறைவடைகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Sep 2022 10:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?