/* */

மடத்துக்குளம்; நுண்ணீர் பாசனம் அமைக்க, 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு

Tirupur News. Tirupur News Today- மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க, 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மடத்துக்குளம்;  நுண்ணீர் பாசனம் அமைக்க, 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு
X

Tirupur News. Tirupur News Today- மடத்துக்குளம் பகுதியில், நுண்ணீர் பாசனம் அமைக்க, 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (கோப்பு படம்)  

Tirupur News. Tirupur News Today- மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது,

தற்போதைய சூழலில், பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும். சாதாரண முறையைக் காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது. மேலும், திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்களை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்கப்படுகிறது. நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணாடி புத்தூர், பாப்பான்குளம், சர்கார் கண்ணாடிபுத்தூர் விவசாயிகள் உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விவரங்கள் மற்றும் மானிய விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த நல்ல வாய்ப்பை தவறவிடாமல், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Updated On: 11 May 2023 10:49 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...