/* */

அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா

Tirupur News- அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில்  2வது பட்டமளிப்பு விழா
X

Tirupur News- அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோ. நளதம் அவர்கள் தலைமை தாங்கினார் . பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு ) முனைவர். ரூபா குணசீலன் முன்னிலை வகித்தார். மொத்தம் 294 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆங்கிலத்துறை -46

வேதியியல் துறை-17

வணிக நிர்வாகவியல் துறை-22

வணிகவியல் துறை- 60

கணினி அறிவியல் துறை-37

பொருளியல் துறை - 82

பன்னாட்டு வணிகவியல் துறை- 30 இவற்றில் (வணிகவியல், வணிக நிர்வாகவியல் துறையில் 6 மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக தரவரிசயில் இடம் பெற்றனர்.


பதிவாளர் ரூபா குணசீலன் பட்டங்களை வழங்கி பேசுகையில், திருமூலர் மற்றும் திருவள்ளுவர் கல்வியைப் பற்றி சங்க காலத்தில் கூறிய வற்றை மேற்கோள் காட்டி கல்வியின் சிறப்புகளையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறைகளையும் மிகவும் அழகாக கூறினார்.

இந்த விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் ஷக்கிலா பானு, செல்வதரங்கினி, அருண் , எஸ்.பாலமுருகன் , தாரணி, ஹேமலதா , பரமேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

விளையாட்டு விழா

அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேற்று ஆண்டு விழா , நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. முனைவா. பு.சா. செல்வத்தரங்கிணி, வணி கவியல் துறைத்தலைவர் மற்றும் பேரவைப் பொறுப்பாசிரியர் வரவேற்புரை வழங்கினார்.

முதல்வர் முனைவர் ஜோ.நளதம் தலைமையுரை ஆற்றி ஆண்டறிக்கை வாசித்தார் . விருந்தினராக திருமதி. ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் , தெற்கு ரோட்டரி இன்னர் வீல் முன்னாள் தலைவி, திருப்பூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அறிவுரைகளை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்தார்.

பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். திரு. பா. பிரசன்ன குமார் உடற்கல்வித்துறை இயக்குனர் விளையாட்டுத் துறை ஆண்டறிக்கை வாசித்தார். செல்வி. சு .நிஷா மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி நன்றி கூறினார்.

Updated On: 25 April 2024 7:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...