/* */

வாணியம்பாடியில் சாராய வேட்டை : டிராக்டர், 4 பைக்,1டன் வெல்லம் பறிமுதல்

வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச  சென்ற டிராக்டர், 4 பைக், 1டன் வெல்லம்  பறிமுதல்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் சாராய வேட்டை : டிராக்டர், 4 பைக்,1டன் வெல்லம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரில் இருந்து இறக்கப்படும் 1 டன்  வெல்லம். 

வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு கொண்டுசென்ற டிராக்டர் மற்றும் 4 இருசக்கர வாகனம்,1டன் வெல்லம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, மாதகடப்பா பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைந்துள்ள அண்ணா நகர்,தேவராஜபுரம், மாதகடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, சுமார் 1 டன் வெல்லம் ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அந்த டிராக்டரின் பின்னால் 4 இருசக்கர வாகனங்களில் சாராய வியாபாரிகள் வந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முற்பட்ட போது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு மலைபகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 12 May 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...