/* */

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கி, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்
X

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 22 கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கி மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 - 22 கல்வியாண்டிற்கான ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய அரசு நிதி உதவி தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் அரசின் முறையான வழிகாட்டுதல் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விலையில்லா பாடநூல் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது அதன்படி

திருப்பத்தூர் வட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மொத்தம் 799 பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கபட்டது. இந்த புத்தகங்கள் அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி 50 முதல் 60 மாணவர்களுக்கும், மேல்நிலைப்பள்ளியில் 200 மாணவர்கள் வீதம் புத்தகங்கள் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் திருப்பத்தூரில் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். அப்போது கலெக்டர் அமர் குஷ்வாஹா மாணவர்களின் கணித அறிவை சோதித்தபோது மாணவர்களுக்கு கணித பாடத்தில் கேள்விகளுக்கு விளக்கத்தை அளித்தார். அப்பொழுது மாணவர்களுக்கு கணித பாடத்தை விளக்கி எழுதிக் காண்பித்தார் .

இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 24 Jun 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...