/* */

கோவிலுக்கு சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சோகம்

ஆம்பூர் அருகே  கோவிலுக்கு சென்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி மனைவி பலி, கணவன் படுகாயம்

HIGHLIGHTS

கோவிலுக்கு சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சோகம்
X

விபத்தில் உயிரிழந்த பெண்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி நிர்மலா உடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள புத்துகோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆம்பூர் புறவழி சாலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு நோக்கி பார்சல் ஏற்றிசென்ற ஈச்சர்லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிர்மலா தலைமீது லாரி பின் சக்கரம் ஏரி தலை நசுங்கி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். காயங்களுடன் கணவர் கோவிந்தராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆம்பூர் அருகே கோயிலுக்கு கணவன் மனைவி இருவரும் சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 Sep 2021 12:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா