/* */

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக வேட்பாளர் பிரபாசங்கரி

எங்களின் அயராத மக்கள் சேவைக்கு அங்கீகாரமாக வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் - 26வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாசங்கரி

HIGHLIGHTS

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக வேட்பாளர் பிரபாசங்கரி
X

நெல்லை மாநகராட்சி 26வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாசங்கரி, அவரது கணவர் பொன்னையாபாண்டியன் (திமுக விவசாயஅணி அமைப்பாளர்) உடன் வாக்கு சேகரிப்பில். 

நெல்லை மாநகராட்சியில் 26வது வார்டில், திமுக வேட்பாளரான பிரபாசங்கரி தீவிரமாக களம் கண்டு வருகிறார். இவர் திமுக மகளிரணியைச் சேர்ந்தவர். இவரது கணவர் பொன்னையாபாண்டியன் திமுக விவசாயஅணி அமைப்பாளர் ஆவார், இவரது மாமனார் விஸ்வநாத பாண்டியன் முன்னாள் துணை மேயராக தொடர்ந்து 2 முறை பதவி வகித்தவர். விஸ்வநாத பாண்டியன் அதிமுக ஆட்சியிலும் துணைமேயராக பதவி வகித்து, அப்போது திமுக தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி மக்களிடம் இவர்கள் குடும்பத்தினர் நன்கு பழகியவர்கள், நெருக்கமானவர்கள் என்பதால், இந்த வார்டில் நிறைய கட்சிகள் போட்டியிட முன்வரவில்லை. ஆனாலும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் வேட்பாளர் பிரபாசங்கரி.


அவர் கூறும் போது, எனது மாமனார் எஸ்.விஸ்வநாதபாண்டியன் துணை மேயராக இருந்த காலத்தில், இந்த பகுதிக்கு பட்டா உரிமம் மற்றும் இலவசவீடு கட்டுவதற்கு, குடிசைமாற்று வாரியம் மூலம் பெரும் உதவி செய்து கொடுத்தார்கள். திருநெல்வேலி மாநகராட்சி 43வது வார்டில் 2011 முதல் 2016 வரை எனது கணவர் எஸ்.வி.பொன்னையாபாண்டியன் ஆற்றியபணிகள் ஏராளம்.

2016 முதல் 2021 வரை நமது பகுதியில் நாங்கள் செய்த சாதனைகள் விபரங்கள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 382 பயனாளிகளுக்கு ரூ 2.10 லட்சம் மானியத்துடன் கூடிய வீடு கட்டி கொடுத்தோம். பேட்டை சத்யா நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் 18.02.2017 அன்று 386 பயனாளிகளுக்கு வீடு வழங்க ஏற்பாடுகள் செய்தோம். பாளையங்கோட்டை திருமால்நகரில் ரெட்டியார்பட்டிரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு இல்லாத 187 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. மாநாகர் பகுதியில் 75 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்கள் முயற்சியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைபெண்கள் என 686 பேருக்கு மாதாந்திர உதவிதாகை (O.A.P) கிடைக்க ஏற்பாடு செய்தோம்.


கொரோனா காலத்தில் தடுப்பூசிமுகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற தேவையான முயற்சிகள் செய்து, பொது மக்கள் பயன்பெறும் வகையில் பணிகளைச் செய்தோம். தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டு மக்களின் குறைகளை அதிகாரிகள் மூலமும் எங்களது சொந்த பணத்தை செலவு செய்தும் சரி தெய்தோம். கொரோனா முதல் அலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எங்களது சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கினோம். எங்களின் அயராத மக்கள் சேவைகக்கான அங்கீகாரமாக மக்கள் வெற்றியை தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட மகிழ்வண்ணநாதபுரம் மக்களுக்கு தங்கும் இடம், உணவு கொடுத்தோம், நிவாரண உதவிகளும் கிடைக்க செய்தோம். மழையால் பாதிப்படைந்த சாலைகளை சுத்தம் செய்தோம், ஓடைகளிலும், கால்வாய்களிலும் அடைத்துக் கொண்டிருந்த புதர்கள், குப்பைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டும், ஆட்களை கொண்டும் அகற்றி, மழை வெள்ளம் தேங்காமல் பாதுகாத்தோம்.

மக்களின் கோரிக்கையை ஏற்று வருங்காலத்தில், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களை பொதுப்பணித்துறை மூலம் தூர் வாரி, கரையை கட்டுவேன். அனைத்து ரேசன்கடைகளும் சொந்தக் கட்டிடத்தில் வார்டுக்குள் அமைய பாடுபடுவேன். சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். புதிய சமுதாயநலக் கூடம் கட்டித்தருவேன். விடுபட்ட வறுமை கோட்டிற்க்கு கீழே உள்ள முதியவர்களுக்கு உதவி தொகை கிடைப்பதற்கும் வார்டில் உள்ள மக்களுக்கு தேவையான அரசு திட்டங்கள அணைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்வேன்.

கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைத்து, சிறப்பான முறையில் 'கால்வாய் அமைத்துதரப்படும். மழை வெள்ளத்தால் பாபா தெரு பாதிக்கப்படாத வகையில், ரயில்வே பீடர்ரோடு கூட்டுறவு அச்சகம் முன்பு உள்ள பாலத்தை அகலப்படுத்தி நிரந்தரமாக சரி செய்து கொடுப்பேன். மேட்டுத்தெரு முதல் கம்பு இணைப்பு பாலம் வரை அகலப்படுத்தி மழைநீர் வடிகால் அமைய நிரந்தர தீர்வு காணுவேன். நெல்லை மாநகராட்சியில் 26வது வார்டை சிறந்த முன் மாதிரி வார்டாக மாற்றிக் காட்டுவேன் என்றார்.

Updated On: 15 Feb 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!