/* */

கொரோனா 3 -ஆவது அலையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது: நெல்லை ஆட்சியர்

ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகளில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்

HIGHLIGHTS

கொரோனா 3 -ஆவது அலையை சமாளிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது: நெல்லை ஆட்சியர்
X

நெல்லை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் பரிசோதனை அதிகரித்தப்பட்டுள்ளது. தொற்றை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார் .

நெல்லை மாவட்டத்தில் கொரொனா மூன்றாம் அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக எல்இடி திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், கொரோனா விழிப்புணர்வு ஆடியோவை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர், மகளிர் திட்ட ஊழியர்கள் சார்பில் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

இதகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மேலும் கூறியதாவது:

நெல்லை மாவட்டத்தில் தற்போது பெரிய அளவிலான நோய் தொற்று பாதிப்பு கண்டறியபடவில்லை. மூன்றாம் அலையை கட்டுபடுத்தும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் கொரனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா பயணிகளுக்கு தற்போது தொற்று அறிகுறி அடிப்படையில் பரிசோதனை செய்கிறோம். தேவைப்பட்டால் 100 சதவீதம் பரிசோதனை நடத்த தயாராக இருக்கிறோம்.

மாவட்டத்தில் 24 மணி நேரம் இயங்கும் வார் ரூம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 3000 க்கும் அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியபட்ட இடங்களை கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றிடவும், அதனை தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் வரும் நபர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் குறித்து கண்காணித்து அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் கேர் மையம் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.

இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் அலை வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படாத சூழலில், தற்போது முதல் முறையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான அக்சிஜன் உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளது. மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுபாடு இல்லை என்று தெரிவித்தார்.

Updated On: 2 Aug 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...