/* */

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
X

 நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் மழையின் தாக்கம் உள்ளது. அவ்வகையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.

நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. சாலைகளில் மழை நீர் ஓடியது.

இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பொழிந்தது. சுமார் 45 நிமிடங்கள் கொட்டித்தீர்த்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால், மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 4 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!