/* */

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: பட்டியல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: பட்டியல் வெளியீடு
X

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் அக்டோபர் 6ம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபர் 9ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 15ம் தேதியும், வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை 23ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுவை வாபஸ் இறுதி நாள் 25ம் தேதி, தேர்தல் வாக்கு பதிவு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது. ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடக்கிறது.

மற்ற காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்காேட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல், இரண்டாம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, இராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.

Updated On: 13 Sep 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!