/* */

கூடங்குளம் பகுதி மக்களுக்கு பணி வழங்க கோரி முன்னாள் சபாநாயகர் ஆட்சியரிடம் மனு

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க கோரி முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

கூடங்குளம் பகுதி மக்களுக்கு பணி வழங்க கோரி முன்னாள் சபாநாயகர் ஆட்சியரிடம் மனு
X

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க கோரி முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கும் உத்தரவை அனுமின் நிலைய நிர்வாகம் மீறி செயல்படுவதாகவும், வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கி தமிழர் விரோதப் போக்கை செயல்படுத்தி வருவதாகவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முன்னாள் சபாநாயகர் தலைமையில் கூடன்குளம் வட்டார பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய அனுசக்தி கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டி உதவியுடன் 2 அணு உலைகளுடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் 4 அணு உலைகள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்காக கூடன்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் இடம் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அணுமின் நிலையத்தில் வழங்கப்படும் பணியில் பிரிவு சி மற்றும் டி ஆகியவையில் எந்தவித தேர்வும் நடத்தப்படாமல் முன்னுரிமை அடிப்படையில் பணி வழ்ங்க 1999ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூடங்குள அணுமின் நிலைய நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 6 ஆகிய அலகுகளில் பணி செய்ய குரூப் சி பிரிவில் இருக்கும் நிரந்தர பணியிடங்களில் 600க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அணுமின் நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவதற்கு முரணாக பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருவதாக கூறி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் தலைமையில் கூடங்குளம் வட்டார பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 600க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வட இந்தியாவில் இருக்கும் ராஜஸ்தான், மும்பை போன்ற நகரங்களில் வெளியீட்டு விளம்பரம் செய்துள்ளதுடன் அங்கு உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலைய பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த செயல் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களையும், கூடன்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் நெல்லை மாவட்ட பகுதி மக்களையும், இளைஞர்களையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயலாக அமைந்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். அணு மின் நிலையத்தில் புதிதாக வட மாநிலத்து நபர்களை பணிக்கு அமர்த்துவதை தடுத்து இங்கேயே புதிதாக நிரப்பப்பட இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பினை விளம்பரம் செய்து நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட தகுதியான நபர்கள் மற்றும் நெல்லை மாவட்ட பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றதும் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் நிரந்தர பணியிடங்களில் தமிழர்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குரூப் டி பிரிவு பணியிடங்களில் கூடங்குளம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும், நிலம் வழங்கிய வாரிசுதாரர்களுக்கும் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தர பணி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சபாநாயகர் ஆவுடையப்பன்:- கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு பணி வழங்காமல் வட மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கும் அணுமின் நிலைய நிர்வாகத்தின் தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 21 April 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை