/* */

பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு.

27வது வார்டில் பாஜக அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்து வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு வாக்குகள் சேகரித்தார்

HIGHLIGHTS

பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு.
X

செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி மாநகராட்சியில் 27 வது வார்டு பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்து வாக்குகள் சேகரித்தார்.

தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது: தூய்மையான, நேர்மையான ஆட்சியை தருகின்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி கட்சியான பாஜக கட்சிக்கு மக்கள் வாக்குகளை தரவேண்டும். ஊழலற்ற நிர்வாகத்தை எங்களால் மட்டுமே தரமுடியும். கடந்த சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தனக்கு வாக்கு அளித்தது போல், மாநகராட்சி தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருநெல்வேலி மாநகராட்சியை பொருத்த வரையில் அனைத்து வார்டுகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காரணம் பல முறை திமுகவும், அதிமுகவும் ஆண்டு விட்டது. ஆகவே பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு மக்கள் வாய்ப்பு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியில் ஏராளமான தொண்டர்கள் இருக்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் போது பாஜக தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதனால் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தனித்து போட்டியிடுகிறோம்.தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம். இதில் மாறுபாடு கருத்து இருக்காது என்பது நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

Updated On: 10 Feb 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்