/* */

நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்

சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்
X

சீதபற்பநல்லூரில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை அமைச்சர் மா. சுப்ரமணியன் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவஞானம், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வநாயகம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Updated On: 12 Sep 2021 12:31 PM GMT

Related News