/* */

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பங்கேற்பு

நகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்ற வாராந்திர மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சியில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பங்கேற்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மனுநீதி நாள் முகாம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் நடைபெற்றது.

மனுநீதி நாள் முகாமில் தென்றல்நகர் நலச்சங்கத்தின் சார்பில் தென்றல்நகர், சீனிவாசநகர், சரண்யாநகர் மற்றும் கவிதாநகர், மக்களின் பொது நலன் கருதி பல்நோக்கு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளின் நலன் கருதியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி முன்பு பயணிகள் நிழற்குடை அமைத்திடவும், தென்றல் நகரில் சிறுவர் பூங்கா அமைத்திடவும், குடியிருப்போர் எண்ணிக்கை கூடிவருவதால் குடிநீர் தேவையும் அதிகமாக உள்ளதால் சீரான குடிநீர் கிடைத்திட வலியுறித்தி மனு அளித்தனர்.

கரையிருப்பு, சுந்தராபுரம், ஆர்.எஸ்.ஏ நகர் செட்டிகுளம், சிதம்பரம் நகர் பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் வேண்டியும், மயானத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டியும், வாய்க்காலில் முள் புதர்களை அகற்றி தடுப்பு சுவர் கட்டித்தர கோரிக்கை வைத்தனர்.பாளையங்கோட்டை மண்டலம் தூத்துக்குடி மெயின்ரோட்டில் உள்ள புதிய வார்டு 37 ஓயாசீஸ் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சர்வீஸ் ரோட்டில் இரு மார்க்கத்திலும் பயணிகள் பேருந்து நிறுத்தத்தை அமைத்திட மனு அளித்தனர்.

குடிநீர் வசதி, பாதாள சாக்கடை அமைத்தல் தெரு விளக்கு அமைத்தல் பகுதி நேர ரேசன் கடை அமைத்தல் சாலைகளை அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் மேயரிடம் மனுக்களை அளித்தனர்.

உடன் துணைமேயர் கே.ஆர்.ராஜூ இருந்தார். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடுமாறு அலுவலர்களுக்கு மேயர் பி.எம்.சரவணன் அறிவுறுத்தினார். முகாமில் மாநகர் பொறியாளர் (பொ) என்.நாராயணன், உதவி ஆணையாளர்கள் லெனின் (பொ) தச்சை மண்டலம், ஐயப்பன் (மேலப்பாளையம்), ஜகாங்கீர் பாஷா (பாளையங்கோட்டை), பைஜூ (பொ) திருநெல்வேலி ), சொர்ணலதா (கணக்கு) மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசாமி, மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 4:30 PM GMT

Related News