/* */

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று பத்துக்கும் மேற்பட்ட வரை கடித்த நாயை மாநகராட்சி பணியாளர்கள் வளைத்து பிடித்தனர்.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
X

நெல்லையில் 10 பேரை கடித்து குதறிய தெருநாய் பிடிப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோரின் அறிவுறுதலின் படி மாநகர பகுதி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க உடனடி நடவடிக்கை.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நேற்று (05-05-22) 10 பேரை கடித்த நாயினை பிடிப்பதற்கு மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன் தலைமையில் தெருநாய்களுக்கான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு குழு மற்றும் கால்நடை பராமரிப்பு குழு ஆகிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இரவோடு இரவாக தேடும் பணி நடைபெற்றது.

இன்று (06-05-22) அதிகாலை 10 பேரை கடித்த நாய் பிடிபட்டது. மேலும் திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை டவுன் காட்சி மண்டபம், கோடீஸ்வரன் நகர், பேட்டை பகுதிகளில் சுற்றி திரிந்த நாய்களும் பிடிக்கப்பட்டது. மாநகர பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தினமும் நாய்களை பிடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு அதற்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.

Updated On: 6 May 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!