/* */

நெல்லை மாநகரில் மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம்

நெல்லை மாநகரில் உள்ள குண்டும் குழியுமாக மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி சகதி குளிக்கும் நூதன போராட்டம்.

HIGHLIGHTS

நெல்லை மாநகரில் மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம்
X

நெல்லை மாநகரில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்சகதி குழிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நெல்லை மாநகரில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சகதி குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவித்தனர்.

நெல்லை மாநகர் பகுதிகளான டவுன், காட்சி மண்டபம், நெல்லை சந்திப்பு, ஸ்ரீபுரம், ஊருடையார் புரம் செல்லும் சாலை, நயினார்குளம் செல்லும் சாலை என பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு அதை முறையாக சரி செய்யாமல் மரண குழிகளாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நகரின் சாலைகள் மேலும் மோசமடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நெல்லை மாநகரில் சாலைகளை சீரமைக்க கோரி மாவீர்ர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் இன்று அதன் நிறுவனத் தலைவர் மாரியப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சகதி குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து அவர்கள் வாட்டர் பாட்டிலில் சகதியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்த சகதியை அனைவரும் உடம்பில் ஊற்றிக் கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் சகதி உடன் சென்று ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று மாரியப்ப பாண்டியன் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் குளித்துவிட்டு வரச்சொல்லி வந்து மனு கொடுக்கும் படி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாரியப்பன் பாண்டியன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்:- நெல்லை மாநகர சாலைகள் படு மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். சமீபத்தில்கூட வாகையடி முக்கில் ஒரு நபர் இறந்துள்ளார். இது சாலைகள் அல்ல மரண குழிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் இந்த சாலை வழியாக செல்கின்றனர். ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று சகதி குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Updated On: 22 Nov 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...