/* */

நெல்லை மாவட்ட மழை எச்சரிக்கை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதிக கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட மழை எச்சரிக்கை மாவட்ட ஆட்சியர் அறிக்கை
X

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கோப்பு படம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (16.12.2023) மாலை முதல் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதிக கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைகிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நேரங்களில் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீர் நிலைகளில் இறங்க வேண்டாம்; மரங்கள் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்; கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்; சாலைகள் , பாலங்களின் மீது வெள்ளம் சென்றால் எக்காரணம் கொண்டும் அதன் மீது செல்லக்கூடாது. மேலும் அதிகனமழை பொழிவு உள்ள நேரங்களில் பாதுகாப்பு காரணங்களால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கோ, 1070 என்ற எண்ணில் என்ற மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112; மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104; அவசர மருத்துவ உதவிக்கு 108; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 'மின்னகம்' உதவி மையத்த்தை 94987 94987 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jan 2024 10:57 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்