/* */

நெல்லையில் சேதமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பாேராட்டம்: எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

நெல்லையில் உள்ள சாலைகளை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் சேதமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பாேராட்டம்: எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
X

நெல்லையில் உள்ள சாலைகளை சரி செய்யவில்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருக்கிறது. நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதனை கண்டித்து பொதுமக்கள் வியாபாரிகள் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதி ஜனதா கட்சி மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும் எனவும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து மிகப்பெரிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது:-

நெல்லை மாநகரத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத அளவில் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளின் அவல நிலையால் பால், சிலிண்டர் போடுபவர்கள் மாநகரத்தில் பயணிக்க முடியாத சூழலால் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அதிக விலை கேட்கும் நிலை உள்ளது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலைகளை உடனடியால சரி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து கட்சியினரை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு பணிகளை தமிழக அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகபடியாக பெய்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழக அரசு கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார். வெள்ள பாதிப்புக்கு காரணம் அதிமுக அரசு என தமிழக அரசு குற்றம் சுமத்துகிறது. ஆட்சி பொறுப்பேற்று தமிழக அரசு 6 மாத காலத்தில் எந்த பணிகளும் சரிவர செய்யவில்லை. 6 மாத காலத்தில் அதிமுக அரசு செய்யாத பணிகளை திமுக அரசு செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை என்றால் வரும் நகர்மன்ற தேர்தலில் எதிரொலிக்கும். திமுகவிற்கு பாதகமாகும் என அவர் தெரிவித்தார். ஜெய் பீம் படம் இதுவரையில் தான் பார்க்கவில்லை எனவும் இந்து மதத்தை மட்டுமல்லாது எந்த மதத்தை தாக்குவதை போல் காட்சிகள் இருந்தால் அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

Updated On: 16 Nov 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்