/* */

வாழை நார் மூலம் பொருட்கள் உற்பத்தி: நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

சுத்தமல்லி, கோடகநல்லூர் பகுதிகளில், வாழைநார் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்வதை, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாழை நார் மூலம் பொருட்கள் உற்பத்தி:  நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
X

வாழை நார் மூலம் பொருட்கள் உற்பத்தி, கலெக்டர் வே.விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சுத்தமல்லி மற்றும் கோடகநல்லூர் பகுதியில், மகளிர் திட்டம் சார்பில் மகளிரை கொண்டு வாழைநார் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்வதை, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டாரங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடுவதை கருத்தில் கொண்டும், வாழை அறுவடைக்குப் பின்னர் வீணாகும் வாழைநார் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்தும் விதமாகவும், அதன் மூலம் வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்திடும் விதமாகவும், தூத்துக்குடியைச் சார்ந்த ரமேஷ் ப்ளவர்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற மற்றும் பீடி தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்திடும் விதமாக ஏற்றுமதி செய்யத்தக்க வகையிலான பொருட்கள் தயாரிப்பு உற்பத்தி நிறுவனங்களாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.

மானூர் ஊராட்சி மற்றும் பாப்பாகுடி ஊராட்சிக்குட்பட்ட சுத்தமல்லி மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் தேசிய ரூர்பன் இயக்கத்தின் கீழ், 70 மகளிரைக் கொண்டு துவங்கப்பட்ட வாழை நார் பொருட்கள் உற்பத்தி பயிற்சி ஆய்வு செய்யப்பட்டது. பயிற்சியாளர்களிடம் பயிற்சிக்கு முந்தைய வாழ்வாதார செயல்பாடுகள், பயிற்சி பற்றிய பயன்பாடு, பயிற்சிக்கு இடையேயான உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்கப் பெறுதல் குறித்த தகவல் கேட்டறியப்பட்டதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

ஆய்வின்போது பயிற்சிக்கு முன்னர், போதிய வேலைவாய்ப்பின்றியும், பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் இப்பயிற்சியின் மூலம் தங்களின் சராசரி வருவாயினை அதிகப்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை வரப்பெற்றுள்ளதாகவும் பயிற்சியாளர்களால் தெரிவித்தனர். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், மகளிர் திட்ட உதவி அலுவலர் வி.ராமர், மானூர் வட்டார வளர்ச்சி அலுஇவலர் முத்துகிருஷ்ணன், பொன்ராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!