/* */

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நெல்லை ஆட்சியர் ஆய்வு

பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதை ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நெல்லை ஆட்சியர் ஆய்வு
X

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு பொதுத் தேர்வு இன்று (05.05.2022) நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, திருநெல்வேலி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் 21345 மாணவ. மாணவியர்களும், மத்திய சிறை பொதுத்தேர்வு எழுதுபவர்கள் 7 நபர்களும், தனித்தேர்வு மையம் எழுதுபவர்கள் 354 நபர்களும் ஆக மொத்தம் 21706 மாணவ,மாணவியர்கள் பொதுத்தேர்வு இன்று எழுதுகின்றனர்.

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 21757 மாணவ, மாணவியர்களும், மத்திய சிறை பொதுத்தேர்வு எழுதுபவர்கள் 7 நபர்களும், தனித்தேர்வு மையம் எழுதுபவர்கள் 272 நபர்களும் ஆக மொத்தம் 22036 மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள்.

மாவட்டத்தில் இந்த பொதுத் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 73 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களை கண்காணிக்க 73 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 99 துறைக் கண்காணிப்பாளர்களும், 1068 அறைக்கண்காணிப்பாளர்களும், பறக்கும் படை பணியில் 186 நபர்களும் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்வு எழுதும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, கழிப்பறை வசதி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மையங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவ.மாணவியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் அனைத்து மாணவ, மாணவியர்களையும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் எவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் டைடஸ் ஜான் போஸ்கோ, பறக்கும்படை கண்காணிப்பாளர் கணேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 5 May 2022 7:42 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...