/* */

நெல்லை மாவட்ட மின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மின்ஆளுமை சங்கத்தின் கீழ் மின் மாவட்ட மேலாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட மின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

திருநெல்வேலி மாவட்ட மின்ஆளுமை சங்கத்தின் கீழ் மின்-மாவட்ட மேலாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தகவல்.

திருநெல்வேலி மாவட்ட மின்ஆளுமை சங்கத்தின் கீழ் மின்-மாவட்ட மேலாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பி.இ.,(BE) அல்லது பி.டெக் (B.Tech) பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் (Computer Science), கணினிபொறியில் (Computer Science), தகவல்தொழில்நுட்பம் (Information Technology), தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology) ஆகியதுறைகளில் பட்டம்பெற்றவராக இருக்கவேண்டும். அல்லது மூன்றாண்டு இளங்கலை (Graduate) படிப்புமுடித்து, முதுகலை (Postgraduate) படிப்பில்எம்.சி.ஏ, (M.C.A.,) எம்.எஸ்.சி (M.Sc.,) கணினி அறிவியல் (Computer Science), தகவல்தொழில்நுட்பம் (Information Technology), மென்பொருள் பொறியியல் (Software Engineering) போன்ற படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். வேறு துறை படிப்பு படித்தவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது. விண்ணப்பதாரர் கண்டிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதற்கான இருப்பிடச்சான்றிதழ் அல்லது பிறப்பிடச்சான்றிதழ் இணைக்கவேண்டும்.

தகுதியுடையோர் https://tirunelveli.nic.in இணையதளம் வழியாக வருகிற 14-03-2022 6-00 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின விபரங்கள் மற்றும் ஆன்-லைன் தேர்வுகள் குறித்த விபரங்கள் 21-03-2022 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேறு விபரங்கள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது. ஆன்-லைன் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வருகிற 02-04-2022 சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில வைத்து நடைபெறவிருக்கும் ஆன்-லைன் தேர்விற்கு நேரில் வரவேண்டும்.

அதனைத்தொடர்ந்து ஆன்-லைன் தேர்வில் மதிப்பெண் தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடைபெறும். இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற முழுவிபரங்களை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Updated On: 1 March 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்