/* */

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
X

நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி  நெல்லை பாலம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைமாமணி சூரியின் 44-வது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் மற்றும் அகில இந்திய சூரி ரத்ததான கழகம் சார்பில் காவல் நிலையம், பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சின்ன கலைவாணர் விவேக் பசுமை இயக்கம் மூலம் விட்டுச்சென்ற மரக்கன்றுகள் நடும் கனவு பணியினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தனது பிறந்தநாளில் நடிகர் சூரி ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் கலைமாமணி சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநில நிர்வாகி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

நாளந்தாவில் கிராமத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அரசுப் பள்ளியில் 1,000 மரக்கன்றுகளும், சி.என். கிராமத்தில் அண்ணா நடுநிலைப்பள்ளியில் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நெல்லை பாலம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் முத்துமாரி, வள்ளியம்மாள், முத்துராமலிங்கம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் கணேசன், இளைஞரணி தலைவர் கார்த்திக் நிர்வாகிகள் அக்ரம், அபூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Aug 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...