/* */

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்து

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்து
X

நெல்லை நயினார்குளம் சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நெல்லையில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல்லை மாநகர பகுதிகளில் சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால், ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் சரிவராத நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அவ்வபோது சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆலங்குளம் பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி குண்டும் குழியுமான சாலையில் சிக்கி கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாரியில் ஏற்றப்பட்ட நிலக்கரியை வேறு வண்டிக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் மிக முக்கியமான நயினார்குளம் சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 2 Nov 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’