/* */

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து போராட்டம்: 22 பேர் கைது

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய 22 பேர் கைது.

HIGHLIGHTS

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து போராட்டம்: 22 பேர் கைது
X

நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய வியாபாரிகள், சிறுவர்கள், பெண்கள் உள்பட 22 பேர் கைது.

ஸ்மார்ட் சிட்டி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய வியாபாரிகள், சிறுவர்கள், பெண்கள் உள்பட 22 பேரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அங்கு சீர்மிகு நகர் திட்டத்தின் ( ஸ்மார்ட் சிட்டி) கீழ் புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளின் வாடகை மற்றும் டெபாசிட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். டெபாசிட் தொகையாக ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது மிகப்பெரிய கட்டண கொள்ளை என்றும் பாளையங்கோட்டை போன்ற சிறிய நகரத்தில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து கடை நடத்த முடியாது என்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் அமர்ந்து காலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என கூறி அங்கேயே தங்கினர். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை. இதையடுத்து இரவோடு இரவாக போராட்டம் நடத்தி வந்த இரண்டு சிறுவர்கள், பெண்கள் உள்பட 22 பேரை பாளையங்கோட்டை போலீசார் திடீரென கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 27 Nov 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்