/* */

கொரோனா விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் - தொடங்கி வைத்த துணை ஆணையர்.

கொரனாவை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் - தொடங்கி வைத்த துணை ஆணையர்.
X

நெல்லையில் கொரனா விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணிகளை மாநகர காவல் துணை ஆணையர் தொடங்கி வைத்தார்

நெல்லை மாநகர் பகுதியில் கொரனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை மாநகர காவல்துறை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நெல்லை மாநகர் பகுதியில் கொரனா குறித்து சுவர் ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட ஓவியர்கள் நலச்சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து இந்த சுவர் ஓவியம் வரையும் பணிகளை மேற்கொண்டு வருகிறது முதல்கட்டமாக இன்று நெல்லை சந்திப்பு பகுதியில் பொது சுவர் ஒன்றில் கொரனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோரை பாராட்டும் வகையில் அவர்களின் உருவப்படங்கள் ஓவியமாக வரையப் பட்டிருந்தது.

துணை ஆணையர் சீனிவாசன் டவுன் உதவி ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் இந்த ஓவியங்களை நேரில் பார்வையிட்டனர் அப்போது துணை ஆணையர் சீனிவாசன் ஓவியத்தில் வண்ணம் தீட்டினார். இது குறித்து துணை ஆணையர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரனாவை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுவர் ஓவியம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளோம் நெல்லையில் விதிகளை மீறுபவர்கள் மீது நாளை முதல் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ பதிவு எடுப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் நாளைமுதல் அந்த பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் நெல்லை மாநகரத்தை சிங்கார நெல்லையாக மாற்றும் வகையில் தொடர்ந்து மாநகர் முழுவதும் உள்ள பொதுச் சுவர்களில் மாவட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறைத்த ஓவியங்கள் வரையப்படும் என்று டவுன் உதவி ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்தார்

Updated On: 18 May 2021 5:24 PM GMT

Related News