/* */

நம்பியாற்று படுகை அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு

துலுக்கர்பட்டி நம்பியாற்று படுகையில் அகழாய்வில் ஏராளமான சிவப்பு, கருப்பு மட்கல ஓடுகள் மற்றும் 36 தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு.

HIGHLIGHTS

நம்பியாற்று படுகை அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு
X

துலுக்கர்பட்டி நம்பியாற்று படுகையில் அகழாய்வில் ஏராளமான சிவப்பு, கருப்பு மட்கல ஓடுகள் மற்றும் 36 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி நம்பியாற்று படுகையில் அகழாய்வில் ஏராளமான சிவப்பு, கருப்பு மட்கல ஓடுகள் மற்றும் 36 தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு. தொடர்ந்து பல அரிய பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்.

தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர் பட்டி கிராமத்திலிருந்து கண்ணநல்லூர் கிராம் செல்லும் சாலையில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் நம்பியற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதியை விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பணியினை கடந்த 16ம் தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இவ் அகழாய்வு பணிக்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் செவ்வண்ணம், கருப்பு-சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி, இட்ட கருப்பு சிவப்பு வண்ண மட்கல், பானை ஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கல பானைஓடுகளும், ஈமத்தாழிகளும் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு வண்ணங்களில் அணிகலன்களும் 36 அரிய வகை தொல்லியல் பொருட்கள் இது வரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக இதன் இயக்குநர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இப்பகுதி இரும்புக்கால புதைவிடப்பகுதியின் வாழ்விடப்பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து இப்பணி ஏப்ரல் மாத இறுதி வரை நடைபெறுகிறது.

Updated On: 31 March 2022 1:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’