/* */

நெல்லையில் பாரம்பரிய விதை நெல் விதைப்பு பணி: கலெக்டர் துவக்கி வைப்பு

வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகளை பயிர் செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையில் பாரம்பரிய விதை நெல் விதைப்பு பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
X

நெல்லை மாவட்டத்தில் 150 விவசாயிகளுக்கு 7 வகையான பாரம்பரிய விதை நெல்மணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி விதைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

பாரம்பரிய நெல் விதைப்பை ஊக்குவிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் 150 விவசாயிகளுக்கு 7 வகையான பாரம்பரிய விதை நெல்மணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி விதைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் உணவு பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்தி வந்த உணவு வகைகள் மற்றும் நெல் வகைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் 7 மண்டலங்களில் "நமது நெல்லை காப்போம்" அமைப்பு சார்பில் பாரம்பரிய நெல் விதைப்பு பணிகளை ஊக்குவிக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்படி பாரம்பரியமான மாப்பிளை சம்பா, கருப்புகவுனி உள்ளிட்ட 7 நெல் வகைகளை சார்ந்த விதை நெல்மணிகள் தலா 2 கிலோ விதம் சுமார் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பாரம்பரிய விதை நெல்மணிகள் வழங்கும் திட்டத்தை கொக்கிரகுளம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆட்சியர் விஷ்ணு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல்மணிகளை வழங்கி விதைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

மாவட்டம் முழுவதும் சுமார் 2 டன் எடையுள்ள விதை நெல் விவசாயிகளுக்கு வழங்கபட்ட நிலையில் இந்த விதை நெல்களை வைத்து சாகுபடி செய்து அடுத்த ஆண்டு விவசாயிகள் ஒவ்வொரு ரகத்திற்கும் சுமார் 4 கிலோ வரை விதை நெல்மணிகளை திருப்பி "நமது நெல்லை காப்போம்"அமைப்புக்கு திருப்பி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் கோடகநல்லூரில் வேளாண்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகளை பயிர் செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On: 17 Aug 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...