/* */

படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட 10 லட்சம் நிதிவழங்கிய முன்னாள் மாணவர்கள்

பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் 1991-96 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் நிதி வழங்கினர்

HIGHLIGHTS

படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட 10 லட்சம் நிதிவழங்கிய முன்னாள் மாணவர்கள்
X

நெல்லை சவேரியார் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட  முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து  ரூ.10 லட்ச ரூபாய் நிதி வழங்கினர்

நெல்லை சவேரியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட 10 லட்ச ரூபாய் நிதி வழங்கினர்.

தென்னகத்தில் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 142 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பள்ளியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று பல்வேறு மாணவர்கள் பல பொறுப்புகளில் சிறந்த ஆளுமை களாகவும் இருந்து வருகின்றனர். சிறப்புமிக்க இப்பள்ளியில் 1991-96 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி மற்றும் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த பருவத்தில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

மேலும் அந்த பருவத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்களின் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது.. இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், பள்ளியை மேம்படுத்துவதற்குமான்நிதி ரூபாய் 10 லட்சத்தை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் தாளாளரிடம் ஒப்படைத்தனர். முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக பெருந்தொகை வழங்கியிருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்