/* */

தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-எஸ்டிபிஐ.

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-எஸ்டிபிஐ.
X

கோப்புபடம்

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவலுக்கு எதிரான தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண திட்டங்கள் வரவேற்கத்தக்கது. மேலும், பத்திரிக்கையாளர்கள், மயான பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல் கொரோனா பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், தொற்றினால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் அரசு நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்களாக பணிபுரிபவர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குபவர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

கொரோனா தொற்றை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இத்தகைய தன்னார்வலர்களின் பணிகள் என்பது மிக முக்கியமானது.

கொரோனாவின் முதல் அலை தொடங்கிய கடந்த ஓராண்டாகவே தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவர்கள் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்பதால், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலன் சார்ந்து மனிதநேயத்துடன் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுகிறேன்.

முதல் அலையின் போதே இத்தகைய தன்னார்வலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த அரசு அந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

குறைந்தபட்சம் அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தக் கூட முன்வரவில்லை. ஆகவே, தற்போதைய அரசு, தன்னார்வலர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

அதன்படி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்கி உரிய பாதுகாப்பும், போதிய ஊக்கத் தொகையும் வழங்கி, அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே மாண்புமிகு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இதுதொடர்பான கோரிக்கையை வலியுறுத்தியுள்ள நிலையில், மீண்டும் காலத்தின் தேவை கருதி தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 May 2021 4:42 PM GMT

Related News