/* */

சிங்கிகுளம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

சிங்கிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

சிங்கிகுளம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
X

நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிகுளம் பகுதியில் உதவி ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீசார் சிங்கிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கிகுளம் பச்சையாறு தடுப்பணை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு போலீசார் சென்றபோது போலீசாரை கண்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றனர். தப்பி ஓட முயன்ற மணிகண்டன், மதன் ஆகிய இருவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சிங்கிகுளத்தை சேர்ந்த முத்து பாலன்(26), மணிகண்டன்(22), மாரியப்பன்(23), நாகல் குளத்தைச் சேர்ந்த மதன்(31), ஆகியோர் என தெரிந்தது. குற்றவாளியிடம் சோதனையிட்டதில் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சா கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வதாகவும் விசாரணையில் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் மதனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 21 Sep 2021 4:39 AM GMT

Related News