/* */

நெல்லை: ஊர் ஊராக ச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி அறிவு தீபம் ஏற்றிவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்களுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

நெல்லை: ஊர் ஊராக ச் சென்று மாணவர்களுக்கு  பாடம் நடத்தி அறிவு தீபம் ஏற்றிவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்
X

மூலைக்கரைப்பட்டி அருகே ஊர் ஊராக சென்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருவதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

உலகமெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது. பொருளாதாரம் மற்றும் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவ, மாணவிகளின் கல்வி திறன் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளன. மேலும் பல தனியார் பள்ளிகள் ஆன் லைனில் வகுப்பு நடத்திய நிலையில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும், அரசு பள்ளியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் பாடங்களை தொடர முடியாமல் பாடங்கள் அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றன.

இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தலின்படி நான்குநேரி தொகுதிக்குள்பட்ட மூலைக்கரைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆங்கில பாட ஆசிரியர் இசபெல்லா மற்றும் அறிவியல் பாட ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் தங்களது சொந்த முயற்சியில் மூலைக்கரைப்பட்டி பள்ளியில் படித்து வந்த மாணவ, மாணவிகளின் கிராமங்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் பருத்திபாடு அருகே உள்ள மறவன்குளம் கிராமத்திற்கு சென்று அங்கு கோவில் மர நிழலில் மாணவ, மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைத்து அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை நடத்தினர். இதனால் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர் இசபெல்லா கூறுகையில், கிராமத்திற்கு வந்து பாடம் நடத்துவதால் மாணவ, மாணவிகளின் அனைவருக்கும் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதை உணர முடிந்தது. இதனால் விட்டு போன பாடங்களை கற்றுக்கொள்ளவாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்

இதுகுறித்து, மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில், எங்கள் ஊருக்கே வந்து பாடங்கள் நடத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பாடங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கத்தை கேட்டு தெரிந்து கொள்வதாகவும், படிப்பின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், மறந்து விட்ட கல்வியை கற்று கொடுக்க வந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்ப தாகவும் கூறினர்.

Updated On: 13 July 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?