/* */

நெல்லையில் பாரதியார் நினைவு கலை இலக்கியப் போட்டிகள்

4 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் பாரதியார் நினைவு கலை இலக்கியப் போட்டிகள்
X

பாரதியார் உலகப் பொது சேவை நிதியத்தின் சார்பில் முப்பத்தி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பாரதியாருடைய கருத்துக்களை இன்றைய சமுதாயத்திடம் கொண்டு செல்லும் பொருட்டு பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை என நான்கு பிரிவுகளில் தொடக்க நிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முப்பத்தைந்தாவது ஆண்டு போட்டிகள் நெல்லை டவுண் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு பாரதியார் உலகப் பொதுச்சேவை நிதியத் தலைவர் கல்வியாளர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். பொது நிதியாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தார். கவிஞர் சுப்பையா மற்றும் பாடகர் கி.சந்திரபாபு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினர். திருக்குறளின் பெருமைகள் குறித்த பாடலை மெல்லிசைப் பாடகர் அருணா சிவாஜி பாடினார். பாரதியார் பாடல்களை திரைப்பட பின்னணிப் பாடகர் பேரா.ஆதிவராகமூர்த்தி பாடினார். அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர்.சு. முத்துசாமி அனைவரையும் வரவேற்றார். பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் நிகழ்வின் நோக்கத்தினை எடுத்துரைத்து தொடக்க உரையாற்றினார். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், தொழிலதிபர் ஏ.எஸ்.எம்.அரசன் சுப்பையா, கே.டி. கோசல்ராம் நற்பணி மன்ற தலைவர் பி.ஆர்.ஏ.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர்.அ.பெருமாள் கலந்துகொண்டு பாரதியின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் அறிஞர்களுக்கு 'பாரதிப்பணிச் செல்வர்' விருதுகளை வழங்கியதோடு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார்.

அகில இந்திய வானொலி மூத்த அறிவிப்பாளர் உமா கனகராஜ், பேராசிரியர் முனைவர்.சௌந்தர மகாதேவன், அரவிந்த் கண் வங்கி பொறுப்பாளர் சாரதா , பரதநாட்டிய ஆசிரியை விசாலாட்சி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் க.செல்வன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் கணேசன், மு.ந.அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம், சமூக ஆர்வலர் இசக்கிராஜா ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். போட்டி நடுவர்களாக பாடகர் சம்சுதீன், பாடகி கஸ்தூரிதிலகம், இசை ஆசிரியர் ஜேசுராஜன், ஜெயேந்திரா பள்ளி துணைமுதல்வர் கங்காமணி, கவிஞர்கள் உமா, வேதிகா, செ.ச.பிரபு, சக்திவேலாயுதம், ம.தி.தா.பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் சோமசுந்தரம், ஆசிரியர்கள் சிவா, முத்துலெட்சுமி, ஜெயஸ்ரீ, ராஜாத்தியம்மாள் ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வில் சிவசக்தி நாட்டியக் குழுவினர் பாரதி பாடல்களுக்கு நடனம் ஆடினர். செய்தி தொடர்பாளர் பூ.ஆறுமுகம் நன்றி கூறினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 3:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...