/* */

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை-மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள்- நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை-மின்வாரியம் சார்பில் அறிவிப்பு
X
பைல் படம்

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை -மின்வாரியம் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... நாளைய மின்தடை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர் தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் உள்ள சிவந்திப்பட்டி மின்பாதையில் நாளை 22 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை அன்று ஸ்மார்ட் சிட்டிக்கான சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பொறியாளர் முத்துக்குட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் தியாகராஜநகர் தாமிரபரணி நியூ நேரு நகர் மற்றும் சிவந்திபட்டி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Updated On: 21 July 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்