நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

ஹோட்டலில் உணவு வழங்க தாமதமானதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கம்பாறையை சேர்ந்த ஜான்கென்னடி(40), என்பவர் வம்பழந்தான் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு 21.08.2021 அன்று வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஆனைக்குட்டி என்ற மணிகண்டன்(20), மற்றும் அவரது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜான் கென்னடியை அரிவாளால்‌ வெட்ட வரும் போது அங்கு வேலை செய்த சகாயபிரவின் தடுத்துள்ளார். இதில் சகாயபிரவினின் தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஜான்கென்னடி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சுத்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் அனிதா (பொறுப்பு) விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனைக்குட்டி என்ற மணிகண்டன்(20) மற்றும் இசக்கி பாண்டி என்ற கார்த்திக்(21), ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Updated On: 22 Aug 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி