/* */

எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டு பிடித்து தரக்கோரி திருச்சியில் மனு

காணாமல் போன எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டு பிடித்து தரக்கோரி திருச்சி போலீஸ் துணை கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டு பிடித்து தரக்கோரி திருச்சியில் மனு
X

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே பி நட்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95சதவீதவேலைகள் முடிந்துவிட்டது என்றும் விரைவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறக்க இருக்கின்றார் என்று கூறி இருந்தார். உடனே இது சம்பந்தமாக மதுரை தோப்பூரை அடுத்த ஆஸ்டின் பட்டியில் உள்ள இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்கச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் ஆகியோருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது காரணம் அந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை காணவில்லை

எனவே காணாமல் போன 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கும்படி திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை பொது செயலாளர் கிருபாகரன், செயலாளர் சிவகாமி கோகுல் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மலைக்கோட்டை பகுதி வெங்கடேஷ், காந்தி கலை பிரிவு சண்முகம் வார்டு தலைவர் மார்க்கெட் சம்சு, ஜீவா நகர் மாரிமுத்து, நிர்மல் குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2022 6:24 AM GMT

Related News