/* */

மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவுரை

மாணவர்கள் கல்வி, விளையாட்டு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவுரை
X
திருச்சி பள்ளி விழாவில் விளையாட்டு மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் விளையாட்டு தினவிழா இன்று நடைபெற்றது.

இதில், கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, வில்வித்தை, கைப்பந்து உள்ளிட்ட ஆடுகளங்கள் மற்றும் கிரிக்கெட்பயிற்சி ஆடுகளங்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். பின்னர் சந்தானம் வித்யாலயாவில் நடந்த விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி தினேஷ் கார்த்திக் பேசினார்.

அவர் பேசுகையில், பள்ளி, கல்லூரி படிப்பு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இறுதி ஆண்டு கேம்ப்பஸ் இன்டர்வியூவில் வரும் நிறுவனங்கள் விளையாட்டுத்துறை மாணவர்களையே முதலில் விரும்புகின்றனர். விளையாட்டு ஒருமுகத்தன்மையை வளர்த்து மன இறுக்கத்தை குறைக்கிறது. பள்ளி, கல்லூரி படிப்பு உங்களுக்கு உலகத்தைஎதிர் நோக்கக் கற்றுத் தருகிறது. சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியின் மிகச் சிறந்த தலைவராக இருந்தவர். உலகின் சிறந்த வீரர்களுள் ஒருவர். அவரைபோல நானும் சிறு கிராமத்தில் விளையாட்டு மைதானம் கூட இல்லாத பள்ளியில் படித்து வந்தவன். மாணவர்கள் கல்வி, விளையாட்டு இரண்டிற்கும் சமமாக முக்கியத்துவம் தர வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து வந்து சாதனை புரிந்த தோனி, அப்துல்கலாமை மாணவர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் முனைவர் கே. மீனா, பள்ளி தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகழக உடற்கல்வி துறை தலைவர் காளிதாசன், பள்ளி தலைவர் தோட்டா பி.வி.ராமனுஜம், இயக்குநர் அபர்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜூனியர் ஆண்கள் பிரிவில் பிரசன்னா, பெண்கள் பிரிவில் ஸ்ரீயா, சீனியர் ஆண்கள் பிரிவில் விஜயதாசன், பெண்கள் பிரிவில் ஆர்த்தி, சூப்பர் சீனியர் ஆண்கள் பிரவில் மதுநாதன், பெண்கள் பிரிவில் பத்மாஜெயஸ்ரீ ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி சீனியர் முதல்வர் பத்மா வரவேற்றார். முடிவில் டீன் கணேஷ் நன்றி கூறினார்.

Updated On: 4 March 2022 1:30 PM GMT

Related News