/* */

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனாா தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில்  கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு
X

திருச்சியில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் தூர்வாரும் பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வாய்க்கால், ஆறு, தூர்வாரும் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக அரசின் நீர்வளத்துறை ஆதார அமைப்பின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் 3 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வாய்க்கால் ஏரி தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 4,694 கிலோ மீட்டர் நீளம் வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது. குறிப்பாக காவிரி பாசனப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும் போது கடைமடை பகுதிவரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்காக இந்த நடவடிக்கை முதலமைச்சரின் உத்தரவு படி எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

பேட்டியின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ். ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 26 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்