/* */

திருச்சி தொகுதிக்கு கூடுதலாக 1970 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி தொகுதிக்கு கூடுதலாக 1970 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி தொகுதிக்கு கூடுதலாக 1970 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாவது கூடுதல் ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறை தோ;தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர்(பொது) தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல், 2024-ஐ முன்னிட்டு, 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் குலுக்கல் முடிவுற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளா;கள் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலிருந்து 660 பேலட் யூனிட் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1280 பேலட் யூனிட்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பேலட் யூனிட்டுகள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் 06.04.2024 மற்றும் 07.04.2024 ஆகிய தினங்களில் பாரத் மிகுமின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு பின்னர் இன்று 08.04.2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாவது கூடுதல் ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் பாh;வையாளர்(பொது) தினேஷ் குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்மற்றும் 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தேர்தல் பிரிவில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு – 648 எண்ணிக்கையிலும், 141. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு – 612 எண்ணிக்கையிலும், 142.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு - 710 எண்ணிக்கையிலும், என ஆக கூடுதல் 1970 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள்; கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு) பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்மற்றும் வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2024 4:46 PM GMT

Related News