/* */

துறையூர்: அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

HIGHLIGHTS

துறையூர்: அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை  அணிவிப்பு
X

துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக புறப்பட்ட அ.தி.மு.க.வேட்பாளருக்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 13-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அபிராமி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று அபிராமி சேகர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று காலை துறையூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு புறப்பட தயாரானார்‌.

துறையூர் அண்ணா சிலைக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். அதன்பின்னர் அபிராமி சேகர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, இந்திராகாந்தி ,மாவட்ட துணை செயலாளர் சின்னையன் ,ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், ஜெயக்குமார், ஜெயராமன் சேனை செல்வம், ராம்மோகன், ஆதாளி, நகர செயலாளர்கள் சுப்பிரமணி, சேகர், ஜெயராமன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நாகராஜ் கவியரசு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 22 Sep 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!