/* */

கடனால் விரக்தி: ஸ்ரீரங்கம் லாட்ஜில் கோவை வாலிபர் தற்கொலை

தொழிலில் ஏற்பட்ட கடனால் விரக்தியால், ஸ்ரீரங்கம் லாட்ஜில் கோவை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கடனால் விரக்தி: ஸ்ரீரங்கம் லாட்ஜில் கோவை வாலிபர் தற்கொலை
X

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் வெங்கடேஷ்பாபு (வயது 40). இவர் கோவையில் செல்போன் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மனைவி வினோதா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட கடனாலும், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். மேலும், குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ்பாபு, குடும்பத்தினரிடம் கடந்த 21-ம் தேதி வெளியூர் சென்று வருவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு இரவு ஸ்ரீரங்கம் வந்தார். ஸ்ரீரங்கத்தில் கீழ உத்தரவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அறை எடுத்தது முதல், நேற்று மதியம் வரை, அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் அறை கதவை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் வெங்கடேஷ்பாபு, தூக்கில் தொங்கியதை கண்டனர். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்து, வரவழைத்து, புகாறாஈ பெற்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!