/* */

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Samayapuram The 2023-சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
X

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Samayapuram The 2023-சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக கருதப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில்.

இக்கோவிலில் வழக்கமாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் தங்கி இருந்து அம்மனை தரிசித்து விட்டு செல்வது வழக்கம். வேண்டும் வரங்களை தருவதால் சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறார். இது தவிர பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் கோவில் வளாகத்தில் இரவில் தங்கி இருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கிறார்கள். வருடம் ஒருமுறை வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இக்கோவிலில் தங்கி இருந்து காலையில் குளித்து சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இது தவிர பழனிக்கு பாதயாத்திரை செல்வது போல் மஞ்சள் நிற ஆடை அணிந்து சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நடை பயணமாக வந்து அம்மனை தரிசித்து செல்வோரும் உண்டு.

மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து 28நாட்கள் உலக மக்களின் நன்மைக்காக சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் பச்சை பட்டினி விரதம் இருந்தார். பச்சைப்பட்டினி விரதம் முடிவில் தேரோட்டம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அம்மன் பல்லக்கு மற்றும் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாழி கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது /இதையொட்டி காலை பத்து முப்பது மணி அளவில் அம்மன் மிதுன லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மன் பச்சை பட்டு உடுத்தி தேரில் எழுந்தருளியதால் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்து நாடு செழிக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.


அம்மன் தேரில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியில் வழியாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையே போக்குவரத்து நெரிசனால் திணறியது.

பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து கையில் தீச்சட்டி ஏந்தி வந்தனர். இது தவிர அம்மன், காளி போன்ற வேடம் அணிந்தவர்களும் ஏராளமானவர்கள் வந்தார்கள். எங்கு பார்த்தாலும் மேள சத்தமும் தீபாராதனையும் இருந்தது. பெரும்பாலான பெண்கள் மஞ்சள் நிற மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்த பெண்கள் கையில் தீச்சட்டி உடன் வேப்பிலை வைத்து சாமி ஆடிக் கொண்டிருந்தார்கள். உலகாளும் தாயே, மகமாயி என பக்தர்கள் கோஷம் எழுப்பி தேரில் எழுந்தருளி இருந்த அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பக்தர்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டனர். வெயியலி வெறும் காலுடன் வந்த பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பிரிங்லர் கருவிகள் மூலம் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும் சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமயபுரம் முழுவதும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. குளிர்பானங்கள், நீராகாரம் ஆகியவையும் வழங்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் தலைமையில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?