/* */

தூத்துக்குடியில் 6 மாதத்தில் நிழல் தரும் மரங்கள் வளர்க்க திட்டம்

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் 6 மாதத்தில் நிழல் தரும் மரங்களாக வளர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில்  6 மாதத்தில் நிழல் தரும் மரங்கள் வளர்க்க திட்டம்
X

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தற்போது நடப்படும் மரக்கன்றுகள் 6 மாதத்தில் நிழல் தரும் மரங்களாக வளர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் 12100 மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் சாலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார், உதவி கோட்டப்பொறியாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை சென்னை கிண்டி நெடுஞ்சாலைகள் ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், தூத்துக்குடி நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் 12100 மரக்கன்றுகள் படிப்படியாக நடும் பணிகள் இன்று மாநகராட்சி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மரக்கன்றுகள் கூண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நிழல் தரும் மரங்களாக வளர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Updated On: 8 Jun 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு