/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் 115 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் கலந்தாய்வு மூலம் விருப்பப்பட்ட 115 பேருக்கு பணியிட மாறுதலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் 115 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்
X

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு நேற்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமாறுதல் வழங்கும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.

அதன்படி, தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 115 காவல்துறையினருக்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது..

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், கோடிலிங்கம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் உள்ளிட்ட உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது.

இந்தக் குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கெனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இது வழக்கமான நடைமுறை என்ற போதிலும் விருப்பத்தின் அடிப்படையில் பொதுமாறுதல் மூலம் பணியிட மாறுதல் கிடைத்ததால் காவல் துறையினர் மகிழ்ச்சியுடன் ஆணையை பெற்றுச் சென்றனர்.

Updated On: 27 Jun 2023 5:48 AM GMT

Related News