திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் வழங்கல்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

திருவாரூரில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் தபொன்குமார் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசானது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசானது அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தி தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் இதர 16 நலவாரியங்கள் துவங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு முடி திருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைவினை தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு ஓவியர் நலவாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தி தொழிலாளர்கள் நலவாரியம் என மொத்தம் 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நலவாரியங்களில்; 41,030 பதிவு பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களுக்காக தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களில் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில், வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகை, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கான உதவி தொகை, கல்வி உதவி தொகை, ஓய்வூதியம், விபத்து மரணத்திற்கான உதவி தொகை, விபத்து ஊனம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான உதவி தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமசடங்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு வீடு இல்லாத பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள்; வீடு கட்டுவதற்கு உதவி தொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலமாக வழங்கப்படுகிறது.

இன்றைய தினம், இயற்கை மரணம் அடைந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான 6 நபர்களுக்கு இயற்கை மரண உதவிதொகை, 31 நபர்களுக்கு கல்வி உதவி தொகை, 15 நபர்களுக்கு ஓய்வூதியம், 3 நபர்களுக்கு திருமண உதவி தொகை, விபத்தின் காரணமாக மரணமடைந்த உறுப்பினரின் வாரிசுதாரர் ஒருவருக்கு விபத்து மரண உதவி தொகை என மொத்தம் 56 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்து வரும் என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ம.ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 12:48 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு
 2. தமிழ்நாடு
  கேரள மக்கள் அச்சப்படவே வேண்டாம்: இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை...
 3. திருவாடாணை
  அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர்...
 4. கடலூர்
  கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
 5. உதகமண்டலம்
  நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு
 7. பண்ருட்டி
  கடலூரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
 8. கடலூர்
  கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
 9. குமாரபாளையம்
  கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு...
 10. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு