/* */

புகையிலை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

புகையிலை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட  ஆட்சியர்  தலைமையில் ஏற்பு
X

புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகிக்கப்படுத்தும்போது வாய்புண், குடல் புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக உயிரிழப்பு ஏற்படுகிறது.

மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்படும். இது தொடர்பாக இன்று வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் எடுத்துரைக்கின்ற விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வது தெரியவந்தால் 94444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சௌமியா சுந்தரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், கர்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  2. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  6. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  7. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  9. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்