/* */

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளம் சீரமைக்கும் பணியை ஆய்வு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளக்கரை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளம் சீரமைக்கும் பணியை ஆய்வு
X

திருவாரூர் கமலாலய குளக்கரை சீரமைக்கும் பணியை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் கரைகள் கடந்த மாதம் பெய்த கனமழையால இடிந்து விழுந்தன. உடனடியாக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு அடுத்த நாளே நேரில் வந்து சேதமடைந்த கமலாலயக் குளத்தின் கரைகளை பார்வையிட்டு கரையை பலப்படுத்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கமலாலய குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Updated On: 28 Jan 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?