/* */

பிறவியில் காது கேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

திருவாரூரில் பிறவியில் காது கேளாத குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிறவியில் காது கேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
X

திருவாரூரில் பிறவியில் காது கேளாத குழந்தைகளுக்கான மருத்துவமுகாம் நடந்தது.

திருவாரூர் புதுத்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் இன்று ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் மற்றும் விஜயபுரம் ரோட்டரி சங்கம் ,மெட்ராஸ் ஈ.என்.டீ. ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து பிறவியில் காது கேளாத வாய்பேசாத ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை திருவாரூர் தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வாரை பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

மெட்ராஸ் ஈ.என்.டீ. ரிசர்ச் பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்தபோது குழந்தைகளின் காது கேளாமையை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விடலாம். மரபணு பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு நோய் நோய்கள் பாதிப்புகளுக்குஆகின்றன. இதைத் தவிர்க்க சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மரபணு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் குறிப்பாக காது கேட்காமல் பிறக்கும் குழந்தைகளால் வாய் பேச முடியாமல் போய்விடுகிறது. காதுகேளாத குழந்தைகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மூலம் காது கேட்கவும், வாய் பேசவும் வைக்கும் அளவிற்கு மருத்துவத்துறை வளர்ந்துவிட்டது.

காது கேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நவீன கருவி பொருத்துவதின் மூலம் காது கேட்டும் திறனை கொண்டுவரப்படுகிறது. பின்னர் குழந்தைகளுக்கு வாய் பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உரிய பயிற்சிகளை குறிப்பிட்ட காலத்திற்கும் அளிக்கப்படும்போது, அக்குழந்தைகள், சமுதாயத்தில் சராசரியாக வாழ முடியும்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியிடம் இத்திட்டத்தை பற்றி கூறியவுடன், அனைத்து அரசு மருத்துவமனையிலும் செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

தமிழக முதல்வர் மருத்துவ துறைக்கு, குழந்தைகள் நலப் பிரிவுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். எனவே பிறந்த குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருப்பதை கண்டறிய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் வசதிகள் உள்ளன.

பிறந்து 6 வயதிற்குள் காதுகேளாத குறைபாடுகள் இருக்கும் குழந்தைக்கு உரிய சிகிச்சை மற்றும் பயிற்சி மூலம் சராசரி குழந்தையை போல வாழ முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்ஹேமசந்த் காந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மை மதர் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் கலைச்செல்வி, பொருளாளர் கருணாநிதி, உறுப்பினர் ராஜவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 18 April 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்