/* */

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை சீரமைப்பு பணி துவக்கம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரையை ரூ. 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான பணி இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை சீரமைப்பு பணி துவக்கம்
X

திருவாரூர் கமலாலய குளக்கரையை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது.

உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது .இதன் தொடர்ச்சியாக உடனடியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

இதில் குளத்தில் இடிந்து விழுந்த 101 அடி சுவர் மற்றும் சேதமடைந்த நாற்பத்தி ஏழு அடி சுற்றுச்சுவர் முழுமையாக அகற்றி மொத்தம் 148அடி நீளத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 77 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பாலச்சந்தரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்..

Updated On: 23 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா